Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும் நடிகையுமான நிக்கோல் ரிச்சி (nicole richie) கடந்த 22 ஆம் திகதி தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
அப்போது பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த மெழுகுவர்த்திகளை அணைப்பதற்காக முகத்தை கேக்கின் அருகே கொண்டு சென்ற போது
எதிர்பாராத விதமாக திடீரென அவரது கூந்தல் தீயில் பட்டு எரிந்துள்ளது.
அதை பார்த்து சுதாரித்துக் கொள்வதற்குள் அவரின் முடி முழுவதும் தீப்பற்றி, அவரின் ஆடையிலும் தீ பரவியது. இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட
நண்பர்கள் தீயை அணைத்தபின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், நிக்கோல் தன்னுடைய இப் பிறந்தநாள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வெளியான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago