2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தீ

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள  நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

வீட்டின் 3ஆவது மாடியில் திடீரெனத் தீ ஏற்பட்டதாகவும் புகைமூட்டத்துக்கு மத்தியின் படி வழியாகத் தான் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றும், அனைவரும் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதவிய பணியாளர்களுக்கும் நலன் விசாரித்தவர்களுக்கும் நன்றி என்றும் நடிகர் கமல்ஹாசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X