2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நடிகை கல்பனா திடீர் மரணம்

George   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள நடிகை கல்பனா இன்று காலை திடீரென மரணமடைந்தார். ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் இருந்த கல்பனாவுக்கு இன்று (25) அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். கல்பனா, இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகமாக மலையாளத் திரைப்படங்களிலும், சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை கல்பனா, நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X