2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நண்பனின் மறைவுக்கு ரஜினிகாந் இரங்கல்

George   / 2017 ஏப்ரல் 27 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் பொலிவூட் நடிகர் வினோத் கண்ணா, புற்றுநோய் காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருடைய மறைவு பொலிவூட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வினோத் கண்ணா மறைவுக்கு தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தனது நண்பர் வினோத் கண்ணாவை இழந்து தவிப்பதாகவும், அவருடைய குடும்பத்தினர்களுக்கு  ஆழ்ந்த இரங்கல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் வினோத் கண்ணா இணைந்து நான்கு ஹிந்தி திரைப்படங்கள் நடித்துள்ளனர்.

1984ஆம் ஆண்டு வெளிவந்த “இன்சாஃப் கெளன் கரேகா”,  1991ஆம் ஆண்டில் வெளிவந்த “ஃபாரிஸ்டே”, “கூன் கார் கார்ஜ்” மற்றும் 1993ஆம் ஆண்டு வெளிவந்த “இன்சனியத் கெ தேவ்தா” ஆகிய நான்கு திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நான்கு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனவவை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X