J.A. George / 2023 நவம்பர் 14 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கும் ’டெஸ்ட்’ என்ற படத்தில் முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்து வருகிறார்.
யோகி பாபு நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை தயாரித்த சசிகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
சாக்சி ஸ்ரீ கோபாலன் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகிய மூவரும் இந்த போஸ்டரில் இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திகதி ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
05 Mar 2026