2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நயன்தாராவின் பாட்டு

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படம்  மலையாளம் சினிமாவின் காதல் திரைப்படங்களுக்கு ஒரு புது விளக்கம் கொடுத்தது.

என்னதான் நம்ம சேரனின் ஆட்டோகிராப் போல திரைப்படம் இருந்தாலும் அதில் ஒரு உயிர் இருந்தது. சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடிய மலையாள திரைப்படம் என்று பல சாதனைகளை இந்த படம் படைத்திருந்தது.

இத்தகைய ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கடந்த சில வருடங்களாக வேறு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த நிலையில், அண்மையில் தனது புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்  

பாட்டு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான  பகத் பாசில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகளின் தெரிவு நடைபெற்று வருகிறது.

இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் 2021 தொடக்கத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தத் திரைப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அறிவிவிப்பு வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X