Freelancer / 2023 ஜூலை 17 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை சன்னி லியோன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகை மற்றும் அமைச்சர் ரோஜாவுக்கு சன்னி லியோன் பதிலடி கொடுத்துள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநில அரசியல்வாதி மற்றும் நடிகர் பவன் கல்யாண் வாராஹி யாத்திரை தொடர்ந்தார். இந்த யாத்திரையின் போது அவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் பவன் கல்யாண் குறித்து அமைச்சர் ரோஜா ரோஜா கூறிய போது ’ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு பவன் கல்யாண் வந்து ஒழுக்கம் குறித்து கற்றுக் கொடுப்பது, சன்னி லியோன் வேதம் ஓதியது போல் உள்ளது' என்று கூறினார்.
அமைச்சர் ரோஜாவின் இந்த கருத்துக்கு பவன் கல்யாண் ரசிகர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் சன்னி லியோன் தனது பதிலடி கொடுத்துள்ளார். ’நான் ஒரு ஆபாச நட்சத்திரம் தான், ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை.
உங்களைப் போல் அல்லாமல் நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்கிறேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை, உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச உலகை விட்டு வெளியேறி விட்டேன், ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.
32 minute ago
36 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
05 Mar 2026