2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘நான் ராணியில்லை’

J.A. George   / 2021 ஜனவரி 01 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரத்துக்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் வேலுநாச்சியாராக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அண்மையில், வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதிலும் அதில் நயன்தாரா நடிக்கவிருப்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட  திரைப்படத்தில் தான் நடிப்பதாக வெளிவந்துள்ள தகவலை நயன்தாரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அத்துடன், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது நயன்தாரா தரப்பில் உறுதி செய்து கொண்டு வெளியிடுமாறு கேட்டு கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனையடுத்து ’வேலுநாச்சியார் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X