Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நித்யா மேனன். தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களாக மட்டும் தெரிவு செய்து நடித்து வருகிறார்.
ஆனால் இயக்குநர்கள் அவருக்கு கதை சொல்வது கஷ்டம் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்த நிலையில் தன் மீதான இந்த விமர்சனம் தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
அதில், “எனக்கு இயக்குநர் கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்கின்றனர். அதற்குக் காரணம் எல்லா விஷயங்களிலும் எனது விதிமுறை என்பது தனித்துவமானதாகத்தான் இருக்கும்.
எனக்கு கதை சொல்வது கஷ்டம் என்ற பேச்சு இருப்பது எனக்கும் தெரியும். ஆனால் கதை கேட்கிற நேரத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படி கேட்பதால் தான் எனக்கு கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்கிறார்கள்.
நல்ல கதை, தெளிவான அம்சங்கள் இருந்தால் தவிர நான் புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். என்னைக் கவர்கிற மாதிரியான கதைகள் இல்லாத திரைப்படங்களை ஒப்புக்கொள்வது இல்லை. அவற்றில் நடிக்கவும் விரும்ப மாட்டேன். அதனால்தான் அப்படி பேசுகிறார்கள்” என நித்யா மேனன் கூறியுள்ளார்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago