2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நிர்வாணத்தை அம்பலமாக்குவேன்: தயாரிப்பாளர் எச்சரிக்கை

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர் மீது நடிகை புகார் அளித்துள்ளார்.

மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர்  பிரபல நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் ஷிப்பூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தன்னை மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில் ”ஆசைக்கு இணங்க மறுத்தால் மார்பிங் செய்த என் நிர்வாண புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டுவிடோம் என தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் இமெயில் மூலம் மிரட்டுவதாகவும்  தெரிவித்துள்ளார்.

நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் குறித்த தயாரிப்பாளர் தற்போது அமெரிக்காவில் உள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X