J.A. George / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சிம்புவின் ‘மாநாடு’திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு கூட்டணி 3ஆவது முறையாக இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை, நடிகர் சிம்புவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் , "மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பி விட்டேன். தற்போது மெல்ல குணமடைந்து வருகிறேன். எனக்காக பிராத்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்க இல்லாமல் நான் இல்லை" என தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago