Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'ராங்கி' திரைப்படம் படம் ராங்கி. நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் 'ராங்கி'.
இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 3 வருடங்களுக்கு பிறகு இப்படம் வருகிற டிசம்பர் 30 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
46 minute ago
2 hours ago
3 hours ago