Freelancer / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் நிறுவனமான '9ஸ்கின்' என்பதில் மலேசிய நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்தார் நடிகை நயன்தாரா. அதைத் தொடர்ந்து தற்போது 'Femi9' எனும் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் நிறுவனத்தைத் நடிகை நயன்தாரா ஆரம்பித்துள்ளார்.

விஜயதசமி நாளில் இதைத் தொடங்கியதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ்சிவனுடன் இணைந்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல! என்னுடைய நீண்டநாள் கனவு. பெண்களுக்காக பெண்களால் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியை கொண்டாட என்னுடன் இணையுங்கள். ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம்' எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு லிப்பாம் கம்பெனி, டீ பிசினஸ், உணவு பிசினஸ் என பலவற்றில் முதலீடு செய்துள்ள நயன்தாரா தற்போது நாப்கின் பிசினஸிலும் தடம் பதித்துள்ளதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். (M)

8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025