S.Renuka / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், தனது கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீடு தள்ளிப்போனமை குறித்தும், தனது மனைவி சங்கீதா சொர்ணலிங்கத்துடனான விவாகரத்து வதந்திகள் குறித்தும் மௌனம் கலைத்துள்ளார்.

சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “மக்களிடம் இருந்து என்னைப் பிரிக்க முடியாது, அதேபோல், என் குடும்பத்திடம் இருந்தும் என்னை யாரும் பிரிக்க முடியாது. அதேபோல, தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தேவையில்லாமல் பரப்பப்படும் வதந்திகள், தனது அரசியல் பயணத்தைத் தடுக்கச் செய்யப்படும் சதி என்றும் அவர் சாடியுள்ளார்.
‘ஜன நாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் திகதியே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் (CBFC) இந்தப் படத்தில் உள்ள சில அரசியல் வசனங்களுக்குத் தடை விதித்ததாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பதாலும் இதன் வெளியீடு காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய விஜய், “மக்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு கருத்தைக் கொண்டு சேர்க்க விடாமல் அதிகார வர்க்கம் தடுக்கிறது; ஆனால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, விரைவில் திரையில் சந்திப்போம்” என தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம், விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்ததாகச் செய்திகள் வெளியாகித் தமிழகத்தையே அதிர வைத்தன.

25 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நடிகையுடனான தொடர்புதான் இதற்குக் காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், மகளிர் தின விழாவில் பேசிய விஜய், தனது குடும்ப உறவுகள் குறித்துச் மறைமுகமாகப் பதிலளித்து, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மனு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. தனது அரசியல் எதிரிகள் திட்டமிட்டு இத்தகைய சர்ச்சைகளை உருவாக்குவதாகத் தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

‘ஜன நாயகன்’ படம் வெளியானால் அது தேர்தலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், திட்டமிட்டே முடக்கப்படுவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாக இந்தப் படம் வெளியாகுமா அல்லது தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெளியீடு செய்யப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை என்றார்.
24 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
56 minute ago