Editorial / 2026 மார்ச் 11 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

த்ரிஷா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதை விட ஸ்டோரி போடுவதற்கு தான் பெயர் போனவர். அப்படி அவர் தன் செல்ல மகள் இஸ்ஸி கிருஷ்ணன் படுக்கையில் வால் ஆட்டிக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்து, கனவு உலகில் பூனைகளை துரத்துகிறது என்று கேப்ஷன் போட்டிருக்கிறார்.
பேக்கிரவுண்டில் உங்கள் இருவருக்கும் ஏற்கனவே ஒருவரையொருவர் தெரியுமா என்று ஒரு குரல் கேட்க, we used to go out என்று பதில் கிடைக்கிறது. அது டிவியில் வந்த வசனம் தான் என்றாலும் தற்போதைய சூழலை மனதில் வைத்தே அதையும் சேர்த்து பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார் த்ரிஷா கிருஷ்ணன் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விருது விழா மேடையில் கல்பாத்தி வீட்டு விசேஷத்திற்கு த்ரிஷா அணிந்து சென்ற சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி குந்தவை பற்றி சொல்லுங்க சார் என்று ப்ரியங்கா தேஷ்பாண்டே பார்த்திபனிடம் கேட்டார். குந்தவை சில நாட்கள் வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. பிரச்சனைகளை தவிர்க்க என்று ரைமிங்காக பார்த்திபன் பதில் அளித்ததை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட அது கண்டபடி வைரலாகிவிட்டது.
3 minute ago
21 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
21 minute ago
34 minute ago
44 minute ago