Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் யேசுதாஸுக்கு புதன்கிழமை (26) இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு இரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகின.
பலரும் யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனது தந்தை யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடகர் யேசுதாஸ், கடந்த ஜனவரி 10ஆம் திகதி அன்று தனது 85ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
22 minute ago
31 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
1 hours ago
3 hours ago