J.A. George / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’இரவின் நிழல்’என்ற படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தின் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
அண்மையில், இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடுகிறார் என்று அறிவித்தார். இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசனை அடுத்து இந்த படத்தில் தேசிய விருது வென்ற பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பார்த்திபனின் ’இரவின் நிலவின்’ படத்தில் இடம்பெற்ற ’மாயவா தூயவா’ என்ற பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் பார்த்திபனின் அடுத்த படத்திலும் ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கும் தேசிய விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பார்த்திபனின் அடுத்த படத்தின் தலைப்பு உட்பட மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago