Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அளவில் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ள டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் தனியார் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி பல சீஸன்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழிலும் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீஸன் தற்போது வரப்போகிறது.
கொரோனா பொதுமுடக்கத்தால் சற்று தாமதமாகத் தொடங்கவுள்ள, இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ பல தொலைக்காட்சிகளிலும் விறுவிறுப்பாக தற்போது ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது.
நெட்டிசன்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் விருந்துவைக்கும் வகையில் பிக்பாஸ் தமிழ் சீஸன் 4 - நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்போவதாக தனியார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
யார் யார் இந்தமுறை பங்கேற்கப் போகிறார்கள் என்ற போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் இன்னும் வெளிவராத நிலையில், நெட்டிசன்கள் பலர் தங்கள் யூகங்களையும், கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
இன்று மாலை வெளிவரும் அறிக்கையில் பங்கேற்பாளர்களின் அதிகாரப்பூர்வமான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
40 minute ago
45 minute ago