Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார்.
அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.
அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம்.
அண்மையில் மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனுடன் இது ரியல் என்றும், இதையும் காப்பி செய்யாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வீடியோவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனக்கும், காதலருக்கும் நிச்சயதார்த்தம் ஆகி விட்டது என்றும், அடுத்த ஆண்டு பெப்ரவரி 14 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தனது வருங்கால கணவரின் பெயரரையோ, என்ன செய்கிறார் என்பதை தெரிவிக்க விரும்பவில்லை என்றும், எனது திருமணம் நடக்கும் வரை அவரை பற்றிய எந்த தகவலும் வெளியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
15 minute ago
22 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
31 minute ago
32 minute ago