2025 மே 05, திங்கட்கிழமை

பிரபல தொகுப்பாளினி நட்சத்திராவுக்கு திருமணம் முடிந்தது!

J.A. George   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கியவர் நட்சத்திரா. அதன் பின்னர் குஷ்புவின் தயாரிப்பில் வெளியான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் இவர் நடித்தார்.

ஆனால் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருந்த நிலையில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண கோலத்தில் நட்சத்திரா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X