Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 29 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான வெங்கல்ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். இவர்கள் காம்போவில் வெளியான காமெடிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.
விக்ரம் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தேங்காய் காமெடி காட்சிகள் மிகப்பெரிய பிரபலமான இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், வடிவேலு சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த காரணத்தால், வெங்கல்ராவுக்கும் சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால், வறுமையில் வாடி வந்தார் வெங்கல்ராவ். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், தற்போது விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் வெளியானதில் இருந்து நடிகர் வெங்கல்ராவ் விரைவில் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பூ ராமு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago