Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் மீது உரசுவதற்காகவே பேருந்தில் அடிக்கடி சென்றதாக நடிகர் சரவணன் வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் பேசிய போது, சேரன் மீது மீரா வாசுதேவன் கூறிய புகார் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, சேரனுக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன், இப்படி பார்த்தால் பேருந்தில் கூட பெண்கள் பயணிக்க முடியாது. அங்கேயும் சிலர் பெண்களை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே வருகின்றனர் என்றார்.
அப்போது கை தூக்கிய சரவணன் கல்லூரியில் படிக்கும் நானும் அப்படி செய்திருக்கிறேன் எனக்கூறி அதிர வைத்தார். அதிர்ச்சியான கமல் ஒரு மாதிரி அதை சமாளித்துவிட்டார்.
ஆனால், சரவணனின் கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை கமல் ஏன் கண்டிக்கவில்லை என பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பிக்பாஸ் மூலம் சரவணனுக்கு தெரிவிக்கப்பட்டு அவரை மன்னிப்பு கேட்க வைத்தார்.
பிக்பாஸ் வீட்டிலும், வெளியிலும் சரி. யாரும் அதை செய்யக்கூடாது என்பதைத்தான் கூற வந்தேன். ஆனால், அதை சொல்ல முடியாமல் போய்விட்டது.
எப்படியோ நான் பேசியது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சரவணன் பேசிய வீடியோ நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago