George / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் ராஜேஸ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் தனது ஆஸ்தான கொமடியனான சந்தானத்தை கழற்றிவிட்டு அவருக்கு பதிலாக ஆர்.ஜே.பாலாஜியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இசையமைப்பாளராக இருந்த ஜீ.வி.பிரகாஷ் குமார் டார்லிங் திரைப்படம் மூலம் ஹீரோவானதும், நடிகராக பிசியாகிவிட்டார். அவர் நடித்த டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகியத் திரைப்படங்கள் வெற்றியடைந்ததால் தற்போது தனது அடுத்தடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
அவரது நடிப்பில் உருவான முதல் திரைப்படமான பென்சில் பல வருடங்களாக முடங்கிக் கிடந்தது. தற்போது பென்சில் திரைப்படத்தையும் வெளியிடவுள்ளனர்.
அவர் நடித்துக் கொண்டிருக்கும் புரூஸ் லீ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதுடன் டார்லிங் இயக்குநர் சாம் அன்டன் இயக்கத்தில் மீண்டும் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்படத்தின் படபிடிப்பு பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இதில் அவருக்கு ஜோடியாக மீண்டும் ஆனந்தி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கோலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 minute ago
23 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
34 minute ago
41 minute ago