Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசுரன்’ பட நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர், மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் என்பவர் மீது போலீஸ் புகார் அளித்திருந்தார்.
புகாரில் இயக்குநர் ஸ்ரீகுமாரால் என் உயிருக்கு ஆபத்து என்றும், தான் கையெழுத்து போட்டுக்கொடுத்த லெட்டர்பேட், செக் போன்ற சில ஆவணங்களை அவர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மஞ்சுவாரியரின் இந்த புகாருக்கு இயக்குநர் ஸ்ரீகுமார் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “பத்திரிகைகளில் பார்த்தே உங்கள் புகாரைத் தெரிந்துகொண்டேன். காரியம் முடிந்ததும் கைவிட்டுவிட்டு செல்பவர்தான் மஞ்சுவாரியர், அவரை நம்ப வேண்டாம் என்று என்னிடம் பலர் கூறியிருக்கிறார்கள்.
திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியே வரும் போது, வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று நீங்கள் சொன்னதை நான் மறக்கவில்லை. அப்போது ரூ.25 லட்சம் கொடுத்து விளம்பர படத்துக்கும் சினிமாவுக்கு ஒப்பந்தம் செய்தேன்.
அப்போது, அந்த குருவாயூரப்பனே வந்து உதவி செய்ததாக நீங்கள் சொன்னதும் ஞாபகத்தில் இருக்கிறது. உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை.
உங்களால் ஏராளமான மிரட்டல்களையும் அவமானங்களையும் நான் சந்தித்துவிட்டேன். என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
07 Jul 2025