2025 மே 09, வெள்ளிக்கிழமை

மணிரத்னத்தின் புதிய கூட்டணி

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்றுவெளியிடை படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில்  நடிக்கும் நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனால், புரொடெக்‌ஷன் எண் 17 என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கான நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்தத் திரைப்படம் மெகா பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X