2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முதல் மனைவியுடன் வந்த மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சோதனை

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஜாய் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிசில்டா, தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியது, இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்தது. இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியுடன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்பவம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது

மாதம்பட்டி ரங்கராஜ், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ருதியை, ஏற்கனவே திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து செய்யாமலேயே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து, ரங்கராஜ் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.

சமீபத்தில், கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜும், அவரது முதல் மனைவி ஸ்ருதியும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக்கூட பேசிக்கொள்ளவில்லையாம். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். திடீரென்று ஒரு நபரை பார்க்கும்போது ஒரே பக்கமாக அந்த நபரை பார்த்து சிரிக்கிறார்களே தவிர இருவரும் முகம் கொடுத்து ஒரு இடத்திலும் பேசவில்லை இந்த நிகழ்ச்சிக்கு மாதம்பட்டி ரங்கராஜன் தனியாக ஒரு காரில் வந்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம், இந்த விவகாரம், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதை உணர்த்துகிறது.

மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி என்று சொல்லிக் கொள்ளும் ஜாய் கிரிசில்டா, சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். ஆனால், ரங்கராஜ், தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி வெளியான பிறகு, ஜாய், எந்தவிதப் பதிவுகளையும் வெளியிடவில்லை. "இதனால், குடும்பத்திற்குள் குழப்பம் வந்துவிட்டதா?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜாய் கிரிசில்டா, ரங்கராஜுடன் எடுத்த திருமணப் புகைப்படங்களை, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது ரங்கராஜ், தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .