2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

மாதவிடாய் காலத்தில்கூட இப்படியா?

S.Renuka   / 2026 ஜனவரி 13 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை பார்வதி மரியான் படப்பிடிப்பின்போது, தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

பார்வதி திருவோத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கிக் கொண்டவர்.

கதையம்சமுள்ள படங்களில் நடிப்பதுடன் அரசியல், இலக்கியம் ரீதியிலான உரையாடல்களில் பங்கேற்று தன் கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பவரும் ஆற்றல் கொண்டவர்.

இவர் மலையாள சினிமாவில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பார்வதி, “மரியான் திரைப்பட படப்பிடிப்பின்போது, முழுவதுமாக தண்ணீரில் நனைவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. 

அப்போது, உடை மாற்ற வேறு ஆடைகளையும் எடுத்து வரவில்லை. நான் ஹோட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் என கூறினேன். ஆனால், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.

பின், எனக்கு மாதவிடாய் நான் போக வேண்டும் என கத்திச் சொன்னேன். படப்பிடிப்பில் என்னுடன் சேர்த்து 3 பெண்கள் மட்டுமே இருந்தனர். அந்தச் சூழலில் யாரும் ஆதரவாக இல்லை” என தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .