S.Renuka / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

2012ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார்.
இதனையடுத்து, ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட காதலர் தின வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
காதல் குறித்து அவர் எழுதிய வார்த்தைகள் பலருக்கும் மனதுக்கு நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ‘காதலை பிடித்துக்கொண்டால் வாழ்க்கை முழுக்க நிறைவாக இருக்கும்’ என்ற கருத்தை மையமாக வைத்து அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு, காதலில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கான ஒரு மோட்டிவேஷனாக இருக்கிறது.
இந்த பதிவுடன் சேர்த்து, தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவில், “கைகளை திறந்தால் எதுவும் இருக்காது. ஆனால் மனசுக்குள் பார்த்தால், ஒரு உண்மையான காதல் இருக்கும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உன்னை அன்பாக உணர வைக்கும் அந்த ஒரே நபர் இருந்தால் போதும், அப்போ சந்தோஷமாக இரு. நீ ராஜாக்களை விட பணக்காரன். தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். வாழ்க்கையில் போதுமான அளவு வென்றவன். இந்த பிரபஞ்சத்தால் நேசிக்கப்பட்டவன்.
எந்த சூழ்நிலையையும் தாண்டி காதலில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் மட்டுமல்லாமல், திருமணமான தம்பதிகளும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் போட்டோஸ், பதிவுகள், சிறிய வாழ்த்துச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா பிரபலங்களும் இந்த வரிசையில் இணைந்து, தங்கள் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
35 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
2 hours ago