2021 ஜூலை 29, வியாழக்கிழமை

’மறுக்கும் நயன்’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நயன்தாராவிடம் கேட்ட அதை அவர் மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது அந்த படத்தின் புரமோஷன் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் நடிகை நயன்தாராவுக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 5 கோடி கொடுக்கப்பட்டும் அவர் எந்த படத்துக்கும் புரமோஷன் விழாவுக்கு செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு ஒப்புக் கொண்டதாக செய்தி வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி ரஜினியுடன் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தர்பார் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள அவர் ஒப்புக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 

ஆனால், ராம் சரண் தன் தந்தை சிரஞ்சீவியை வைத்து தயாரித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு நயன்தாராவிடம் கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

கடந்த 2014ஆம் ஆண்டு அனாமிகா எனும் தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்ததால் நயன்தாராவுக்கு ஓராண்டு தடை விதித்தது டோலிவுட் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .