J.A. George / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை பிரியா பவானிசங்கர்.
அவர், தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வந்ததாகவும், அதன்பின்னர் திடீரென இருவருக்கும் பிரிந்துவிட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் மோதுவது போன்ற ஒரு போஸ்டையும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதுமட்டுமின்றி நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவு செய்ததால் இருவருக்கும் காதல் என வதந்தி கிளம்பியது. ஆனால் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் ப்ரமோஷன் தான் அது என்பது பின்னர் தெரியவந்தது
இந்த நிலையில் ப்ரியா பவானிசங்கர் தனது சமூக வலைத்தளத்தில் அழகிய புகைப்படத்தை பதிவு செய்து, ‘தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .