2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மாலையும் கழுத்துமாக சரத்குமார் ஜோடி

J.A. George   / 2021 ஜனவரி 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சரத்குமாருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனாவில் குணமாகி திரும்பி வந்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலில் சென்று வழிபாடு நடத்தினார்.

அங்கு உள்ள கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பதும் பூசாரிகள் பூஜை செய்து அவருக்கு பிரசாதம் கொடுப்பதுமாக காட்சிகளுடன்கூடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி இருவரும் மாஸ்க் அணிந்து நிற்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து ராதிகா தனது டுவிட்டரில், “காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் கிடைக்க கோவிலுக்கு வந்துள்ளோம். சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அத்தனை மதங்களின் அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கைகூப்பி எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X