J.A. George / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.
வடபழனியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்தபோது இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அங்கிருந்தோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தாகவும் கூறப்படுகிறது.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று வைத்தியர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
அதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி உட்பட பல படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிப்பிற்கு முன்பாக இவர் டப்பிங் கலைஞராகப் பணியாற்றியவர்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago