Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் திரையுலகத்தில் தமிழ் பேசத்தெரிந்த, பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையாக இருக்கும் நடிகை அஞ்சலி, சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்த் திரையுலகத்தில் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், திடீரென தமிழ் சினிமாவை விட்டு விலகி., தெலுங்கு பக்கம் தஞ்சமடைந்தார்.
அங்கு சில முக்கியமான படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக வர முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழில் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்த 2018ஆம் ஆண்டில், அஞ்சலி நடிக்கும் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. விஜய் அண்டனியின் 'காளி', ராம் இயக்கத்தில் 'பேரன்பு', 'காண்பது பொய்' மற்றும் சசிகுமார் ஜோடியாக 'நாடோடிகள் 2' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள், கடந்த வாரம் முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்ப் படங்களில் இழந்த பெயரை மீண்டும் பெறவேண்டுமென, உடற்பயிற்சி செய்து தன் எடையை நன்றாகக் குறைத்துள்ள அஞ்சலி, அவருடைய ஸ்லிம்மான புகைப்படங்களை, அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025