2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

மீண்டும் இணையும் தெகிடி கூட்டணி

R.Tharaniya   / 2025 மே 26 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தெகிடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. துப்பறியும் வித்தியாசமான கதைக்களத்தில் கிரைம் திரில்லர் திரைப்படமாக கவனம் பெற்றது.

அத்துடன், திரைக்கதையும், பின்னணி இசையும் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கி இருந்தார். இந்த நிலையில் 11 வருடம் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரமேஷ் எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவர் அசோக் செல்வவுடன் 11 வருடம் கழித்து மீண்டும் இணைய உள்ளார். படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X