S.Renuka / 2026 ஜனவரி 18 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}


விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
ஆனால், இருவரும் இணைந்து நடித்ததில்லை என்பதால் இது உண்மையாக இருக்காது எனக் கூறப்பட்டது.
மும்பையில் மிருணாள் தாகூர் நடித்த ‘SON OF SARDAR 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இதில் இருந்து தான் இந்த வதந்திகள் பரவத் தொடங்கியது.
தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனுஷ் – மிருணாள் தாகூர் இருவருமே நீண்ட மாதங்களாக காதலித்து வருவதாகவும், பெப்ரவரி மாதத்தில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று தனியே வசித்து வருகிறார்கள். தற்போது தனுஷ் மீண்டும் திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார்.
1 hours ago
4 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
26 Jan 2026