2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் புகைய ஆரம்பித்த கௌதம் - கார்த்திக் பிரச்சினை!

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவுதம் மேனன் சொன்னது எல்லாம் பொய் அத்துடன், கவுதம் மேனன் செய்த செயலுக்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். முடிந்தது என நினைத்த இயக்குனர்கள் கவுதம் மேனன், கார்த்திக் நரேன் இடையேயான பிரச்சினை மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது.

கவுதம் மேனனுடனான பிரச்சினை குறித்து கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது, “கவுதம் மேனன், அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் மனதை புண்படுத்தும்படி நாங்கள் ஏதாவது கூறியிருந்தால் நாங்களும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இயக்குனர் - இயக்குனர் உறவு என்பதை தாண்டியும் ஒரு சாதாரண மனிதரை நடத்த ஒரு முறை இருக்கின்றது அல்லவா? ஆனால் அதை கூட அவர் உணரவில்லை.

கொஞ்சமாவது பணம் கொடுக்குமாறு கவுதம் மேனனிடம் கெஞ்சினோம். ஆனால் அதற்கு அவர் நடந்துகொண்ட விதம் தான் எங்களை காயப்படுத்தியது. அரவிந்த்சாமி முழு சம்பளத்தையும் தரும்வரை, டப்பிங் பேசமாட்டேன் என தெரிவித்ததாக கௌதம் மேனனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில், அரவிந்த்சாமி இல்லாவிட்டால் நரகாசூரன் படம் என்றோ கைவிடப்பட்டிருக்கும். கவுதம் என் படம் வெளியாவதை தாமதப்படுத்துவது பிரச்சினை அல்ல. நான் கவலைப்படுவதால் படத்தை வெளியிடவும் முடியாது. படம் தாமதாகிறது என்று யாரும் கவலைப்படவுமில்லை. இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியாகும் என்று கூறி, ஒரு நம்பிக்கையை கவுதம் மேனன் தெரிவித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். படப்பிடிப்பு முடிந்ததில் இருந்து, ஏதாவது முதலீடு செய்யுமாறு அவரிடம் கெஞ்சுகிறோம். ஆனால் அவர் அதற்கு இசையவில்லை. அவ்வளவு ஏன், எங்களுக்கு சரியான சம்பளம் கூட கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பணமே இல்லாமல் போய்விட்டது.

கொஞ்சமாவது பணம் கொடுக்குமாறு அவரிடம் கேட்டோம். ஆனால் அவர் எங்களைப் புறக்கணித்துவிட்டார். அப்போது தான் எங்களுக்கு மனவேதனை ஏற்பட்டது. அரவிந்த்சாமி மட்டும் இல்லை என்றால் இந்த படம் என்றோ கைவிடப்பட்டிருக்கும். படப்பிடிப்புக்கு முன்பு அவர் முன்பணம் வாங்கவில்லை. இருப்பினும் நடிக்க வந்தார். அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் தாமதமாகியும் அவர் புகார் கூறவில்லை. சம்பளம் கிடைக்கும் வரை, டப்பிங் பேச வேண்டாம் என்று நான் தான் அவரிடம் கூறினேன்.

கலைஞர்கள், தினசரி கூலி பெறுபவர்கள் என்று அனைவருக்கும் சம்பள பாக்கி உள்ளது. அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததை நினைத்து குற்ற உணர்வாக உள்ளது. டுவிட்டரில் நடந்த விஷயத்திற்கு பிறகு நானும், கவுதம் மேனனும் பேசிக் கொள்ளவில்லை. அவரின் ஆட்கள் என்னை அணுகி பிரச்சினைக்கு சில தீர்வுகளைக் கூறினார்கள். இருப்பினும், இனி எந்த இயக்குனரையும் அவர் இப்படி நடத்தக் கூடாது என்பதற்காகவே நான் போராடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் நரேன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X