2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மீண்டும் வில்லனாக மாறிய சரத்குமார்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்த நடிகர்கள் பட்டியலில் சரத்குமாருக்கும் முக்கிய இடம் உண்டு. 1988இல் ‘கண் சிமிட்டும் நேரம்’ எனும் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார், 1990ஆம் ஆண்டு, ஆர்கே செல்வமணி இயக்கத்தில், விஜய்காந்த் ஹீரோவாக நடித்த ‘புலன் விசாரணை’ திரைப்படத்தில், வில்லனாக நடித்தார். பிரமாண்ட வெற்றிப் படமான இதில், சரத்குமாரின் வில்லத்தனம் வெகுவாகப் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் வில்லனாகவே வந்தவர், ‘பாலைவனப் பறவைகள்’ என்ற திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அவருடன் நடித்த இன்னொரு ஹீரோ வேறு யாருமல்ல; தன் வில்லத்தனத்தால் பல ரசிகர்களை  பெற்றுக்கொண்ட ஆனந்தராஜ்.

அதன் பிறகு வெளிவந்த ‘சேரன் பாண்டியன்’, ‘சூரியன்’ போன்ற படங்களும் அவருக்கு வெற்றியைக் கொடுக்க, ‘நாட்டாமை’ திரைப்படத்துக்குப் பிறகு, முன்னணி நாயகர்களில் ஒருவராகிவிட்டார் சரத்குமார். 2010 வரை சரத்குமாருக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் இருந்ததை மறுப்பதற்கில்லை.

அதன் பின், சரத்தும் தமிழில் மட்டும் நடித்துக் கொண்டிருக்காமல் தெலுங்கு, மலையாளம் என தன் கவனத்தைத் திருப்பினார். கௌரவ வேடங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் தான், அவர் மீண்டும் வில்லனாக மாறியுள்ளார். ஆனால் இந்த முறை தமிழில் அல்ல, தெலுங்கில் வில்லனாகியுள்ளார்.

அல்லு அர்ஜூன் நடிக்கும், “என் பேரு சூர்யா, என் வீடு இந்தியா” படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே அல்லு அர்ஜூனுடன் ‘பன்னி’ படத்தில் நடித்துள்ளார் சரத்குமார், இப்போது இரண்டாவது முறையாக இணைகிறார்.

அந்த வகையில் மீண்டும் சரத்குமார் வில்லனாக நடிப்பது, திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .