Freelancer / 2025 ஜூன் 14 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தக் லைஃப்” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் “முத்தமழை” பாடலை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை.
இந்த நிலையில் பாடகி தீ பாடிய “முத்தமழை” பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேடையில் பலரின் முன்னிலையில் திரிஷா இப்பாடலை பாடுவது போல் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாடகி தீயின் குரல் திரிஷாவுக்கு பொருந்தவே இல்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “நல்லவேளை இப்பாடலை படத்தில் வைக்கவில்லை” என்றும் விமர்சித்து வருகின்றனர்.
அதே போல் பலரும் சின்மயியின் குரல்தான் திரிஷாவுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.
“தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
இந்த காரணத்தினால் அவ்விழாவில் சின்மயி முத்தமழை பாடலை பாடினார்.
சின்மயியின் குரலில் இப்பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும் “தீ குரலை விட சின்மயி குரல்தான் சிறப்பாக இருந்தது” என கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
40 minute ago
58 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
58 minute ago
5 hours ago