Editorial / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார். இதற்கிடையில் அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு ஒரு குறுகிய காதலிலும் இருந்து பிரிந்துவிட்டார்.
இப்போது சிங்கிளாக இருக்கும் தமன்னா கல்யாணம் குறித்துப் பேசியுள்ளார். அதில் ”நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவருக்கு சிறந்த வாழ்க்கைத் துணையாக இருக்க விரும்புகிறேன். அவர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நான் இப்பிறவியில் அவருக்குக் கிடைத்திருப்பதாக அவர் நினைக்க வேண்டும். அந்த அதிர்ஷ்டசாலிக்காகதான் நான் இப்போது உழைத்துக் கொண்டிருக்கிறேன். யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago