J.A. George / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை குஷ்பு.
இவர் நடிப்பை தாண்டி, சீரியல், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார். பாஜகவின் செய்திதொடர்பாளராகவும் உள்ளார்.
தற்போது கூட தனது கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி இயக்கியுள்ள ‘காபி வித் காதல்’ என்ற திரைப் படத்தை குஷ்பு தயாரித்துள்ளார்.
மேலும், கணவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்ற போது தாம் எடுத்த புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் குஷ்பு.
இந்த நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் படம் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அந்தப் படத்தில், அவர் மருத்துவமனையில் கையில் டிரிப்ஸ் ஏறும் நிலையில் படுத்திருக்கிறார். இந்தப் படம்தான் அவர்களுடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து அவர், ”தனக்கு முதுகு தண்டுவட பகுதிக்கு கீழ் இடுப்பு எலும்பு பகுதியில் மிகவும் வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 4) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.
தாம் 2 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும். எனவே இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வேன். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
17 Jan 2026
17 Jan 2026