Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இன்றும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார்.
இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது ஸ்டாலால் ரசிகர்களை கவர்ந்தவர். வயதானாலும் இன்று வரை அவரது நடிப்பும், அவரது ஸ்டைலும் மாறாமல் அப்படியே உள்ளது. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இன்று சூப்பர் ஸ்டாரின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரைத்துரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago