Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக, சன் பிக்சர்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த '2.0', பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த 'காலா' திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில், 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'மெர்க்குரி' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதோடு, அனிருத் ரவிச்சந்தர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
முன்னதாக, ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் பரவியது. எனினும் அதனை விஜய் சேதுபதி தரப்பு மறுத்திருந்தது.
எனினும் தற்போது இது தொடர்பில் விஜய் சேதுபதி தரப்பு தெரிவிக்கையில் ''இப்போதைக்கு '96', 'ஜுங்கா', 'சீதக்காதி', 'சூப்பர் டீலக்ஸ்' உள்ளிட்ட படங்களில்தான் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி படம் குறித்து எவரும் தொடர்புகொள்ளவில்லை. படக்குழு சார்பில் தொடர்பு கொண்டால்தான், அதுபற்றி கூறமுடியும்'' என்றனர்.
எனினும், ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025