2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரம்யா கிருஷ்ணனின் புடவை விலை இவளவா?

J.A. George   / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய திரை உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான முன்னணி நடிகையாக திகழ்பவர்தான் ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பாவில் நீலாம்பரி மற்றும் பாகுபலியில் ராஜமாதா சிவகாமி தேதியாக நடித்து ஆசத்தி பலரது மனதிலும் ஆழமாக பதிந்தவர். 

தற்பொழுது இவர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த புடவையில் போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

அதாவது அந்த போட்டோ ஷூட்டில் அவர் அணிந்திருந்த புடவை பலரது கவனத்தையும் கவர்ந்திருந்தது. அதற்கு காரணம் அந்த புடவையின் விலை தான், ஏனெனில் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள அந்த புடவை, ரூபி ரெட் எம்ராய்டரி ஜார்ஜெட் புடவையாகும். 

இது தூய பட்டு வெல்வெட் மற்றும் தூய பருத்திப் பட்டில் எம்ராய்டரி டிசைன் கொண்டு செய்யப்பட்டது. அதனாலயே இப்புடவை அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் ரம்யா கிருஷ்ணனின் போட்டோ ஷூட் புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X