Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 28 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
ரவி தனக்கு மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். அவரது இந்த கோரிக்கை அவருக்கு எதிரான கண்டனங்களையே பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார் ரவி மோகன். ஆனால் ரவியின் அந்த முடிவு தனக்கு தெரியாது என்று கூறினார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாத ரவி நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நடந்துவருகிறது.
அதேசமயம் ரவி இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு அவருக்கும் கெனிஷாவுக்கும் இருக்கும் தொடர்புதான் காரணம் என்று பலரும் கூறினார். ஆனால் ரவியோ அப்படியெல்லாம் எதுவும் இல்லை; எங்களுக்குள் இருப்பது தொழில்ரீதியான நட்புதானே ஒழிய; வேறு எந்த விதமான உறவும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறினார்.
இதன் காரணமாக இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஓய ஆரம்பித்திருந்தது. ஆனால் ரவியின் செயலால் மீண்டும் பேசுபொருளானது.
அதாவது சில மாதங்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ரவி வந்திருந்தார். இரண்டு பேரும் ஒரு நிறத்திலான உடையை அணிந்திருந்தார்கள். அதிலிருந்து இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.
அவர்கள் ஜோடியாக வந்ததை பார்த்த ஆர்த்தி ரவி முதலில் அறிக்கை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து ரவி மோகனும் தனது பங்குக்கு அறிக்கை வெளியிட; தொடர்ந்து ஆர்த்தியின் தாய் சுஜாதா அறிக்கை வெளியிட்டார்.
தனது தாய் அறிக்கை வெளியிட்டவுடன் இறுதியாக ஒரு அறிக்கை என்று ஆர்த்தியும் ரிலீஸ் செய்தார். இப்படி மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு ஒருவரையொருவர் மூன்று பேரும் குற்றம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஒருகட்டத்தில் பொறுத்து பொறுத்து பார்த்த நெட்டிசன்களோ, ரவி - ஆர்த்தி - சுஜாதா - கெனிஷா ஆகிய நான்கு பேரையுமே கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபக்கம் இருக்க ரவி மோகன் தனக்கு 40 லட்சம் ரூபாயை மாதா மாதம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
ஆர்த்தியின் அந்த கோரிக்கை ட்ரோலுக்கு உள்ளானது. இந்நிலையில் ரவி மோகன் பற்றி ஆர்த்தி பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
அதாவது அவர்கள் ஒன்றாக இருந்தபோது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய ஆர்த்தி, "அய்யோ ரவியை புரிந்துகொள்வது ரொம்பவே கஷ்டம். ஏதாவது செய்து வைத்திருந்தால் இதை ஏன் செய்தீர்கள் என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். அதுமட்டுமின்றி திடீரென்று இரவில் எனக்கு ஐஸ் க்ரீம் வேண்டுமென்று சொல்வார்.
சொல்வதோடு மட்டுமில்லாமல் வெளியே சென்று ஐஸ் க்ரீமும் வாங்கிவருவார். ஆனால் ஒன்று வாங்கமாட்டார். மொத்தம் நான்காவது வாங்கிக்கொண்டு வருவார்" என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .