Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை அலியாபட் வீட்டு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பில் நடிகை ராஷிகன்னா சாடி உள்ளார்.
தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணா இதுகுறித்து கூறும்போது, "ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வாழ்க்கை உள்ளது. சில விஷயங்களை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார்கள். பிரபலங்களை பார்க்கும்போது அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஆலியாபட் போன்ற நடிகைகளை பார்த்தால் நிச்சயம் படங்கள் எடுத்துக்கொள்ள தோன்றும். அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. எல்லை மீறினால் அது தாக்குதலுக்கு சமம் என்பது என் கருத்து.
இப்படி நடந்தது அலியா பட்டுக்கா மற்றவருக்கா என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் யாராக இருந்தாலும் ஒன்றுதான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது'' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago