Lenin Raj / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ரத்னகுமார் இயக்கத்தில், '29' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' மற்றும் லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இதில் விது மற்றும் பிரீத்தி அஸ்ரானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி, லோகேஷ் கனகராஜ் குறித்துப் பகிரப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். அவர் பேசுகையில், "லோகேஷ் கனகராஜ் திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே எனக்கு நெருங்கிய நண்பர். அவர் ஏன் வாக்களிக்கவில்லை என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.
தேர்தல் தினத்தன்று அவர் விமான நிலையம் வந்தும், சரியான நேரத்திற்குள் விமானத்தில் ஏற முடியவில்லை. அதற்குள் நுழைவாயில் (Gate) மூடப்பட்டுவிட்டது. இந்த உண்மையை உலகுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்; ஏனெனில் நானும் அப்போது அவருடன்தான் இருந்தேன்" என்று விளக்கமளித்தார்.
மேலும், லோகேஷ் கனகராஜின் தோற்றம் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், "லோகேஷ், தயவுசெய்து முடிவெட்டிவிட்டு மீண்டும் பழையபடி கலைஞராகி விடுங்கள்; உங்கள் முகமே எனக்கு மறந்து போய்விட்டது" என்றார்.
தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் குறித்துப் பேசுகையில், "அவரும் எனது நண்பர்தான். அவர் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார். சூர்யாவுக்கு 'ரெட்ரோ' போன்ற ஒரு படத்தைக் கொடுத்து, 'தி ஒன்' (The One) என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதுபோன்ற ஒரு படத்தை சூர்யாவுக்குத் தர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் என்னை அன்போடு மிரட்டுகிறார்கள். எனவே, சூர்யா நடிக்கவுள்ள 'கருப்பு' திரைப்படத்தில் 'தி ஒன்' என்ற டைட்டிலை நாங்களும் பயன்படுத்துகிறோம்" என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்.
52 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago