J.A. George / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சிம்புவின் போடா போடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கினார்.
அப்போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், காதலர் தினத்தில் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், ”லவ் யூ தங்கமே” என குறிப்பிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் பட்டுவேட்டி சட்டையுடனும், நயன்தாரா பட்டுப்புடவை அணிந்தபடியும் ஜோடியாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026