2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

லிப்லாக் எனக்கு பெரிய விஷயமில்லை ; நடிகை அமலா பால்

Freelancer   / 2023 ஏப்ரல் 25 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில்  பிரபல  இயக்குனர்  பிளஸ்சி  இயக்கத்தில்  உருவாகி  உள்ள  படம் 'ஆடு ஜீவிதம்.' நடிகர்  பிருத்விராஜ்  நஜீப்  முகமது  கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

பிருத்விராஜ் , இந்தப் படத்தில்  கால  மாறுதலுக்கு  ஏற்ப, மூன்று  விதமான  தோற்றங்களில் நடிக்கிறார்  அதில்  ஒன்றுதான்  துபாயில் ஆடு  மேய்க்கும்  வேலை  செய்பவனின்  தோற்றம்.

ஆடு  மேய்ப்பவனாக  வரும்  அவர்  சந்திக்கும்  பிரச்சனைகளை  யதார்த்தமாக  முன்வைக்கும் படம்  ஆடுஜீவதம் . படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைத்துள்ளார் . ஆஸ்கார்  விருது  பெற்ற  சவுண்ட் டிசைனர்  ரசூல்  பூக்குட்டியும்  இப்படத்தில்  பணியாற்றியுள்ளார்  சமீபத்தில் வெளியான  ஆடு ஜிவித்  படத்தின்  டிரெய்லர்  படத்தின்  மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.  பாலைவனத்தில்  ஆடு மேய்க்கும்  போது அவர்  படும்  கஷ்டங்களைப் பார்த்து  கண்ணீர்  விட்டு  கதறும்  அளவுக்கு  உக்கிரமான  காட்சிகள்  நிறைந்த  படமாக  இது இருக்கும் என்றுடிரெய்லர்  பார்க்கும் போது  தெரிகிறது.

 மறுபுறம்,  அமலாபாலுடன்  டிரெய்லரில்  உதட்டுடன்  உதடு முத்தமிடும் லிப் லாக் காட்சியும் உள்ளது. படத்தில்  லிப் லாக்  காட்சி  குறித்து  அமலா  பால் மிகவும்  கூலாக  பதில் அளித்துள்ளார்.  ஆடு ஜீவிதம்  கதையை  பிருத்விராஜ்  கூறும்போது,  படத்திற்கும் கதைக்கும்  லிப் லாக் தேவைப்பட்டதால் அதில் நடித்ததாக அமலா தெரிவித்துள்ளார். லிப்லாக் காட்சி தனக்கு பெரிய விஷயமில்லை  என்றும், நிர்வாணமாகவே  நடித்துள்ளேன்  என்றும் அமலா பால் தெளிவுபடுத்தியுள்ளார்.  ஆடை  படத்தில்  அமலா  பால்  நிர்வாணமாக  நடித்துள்ளார்  என குறிப்பிடதக்கது.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X