2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’லியோ’ படத்தில் நான் நடிக்கவில்லை

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது 'லியோ'. வாரிசு படம் விமர்சன ரீதியாக சொதப்பியதால் இந்தப்படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். 'லியோ' படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.

 கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழுவினர் இந்தியா திரும்பினர். இதனிடையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம், லோகேஷ் கனகராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இதனால் அவரும் 'லியோ' படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அபிராமி தற்போது அளித்துள்ள பேட்டியில், 'லியோ' படத்தில் நான் நடிக்கவில்லை. காஷ்மீருக்கு வேறு ஒரு படப்பிடிப்புக்காக சென்ற போது லோகேஷ் கனகராஜை சந்தித்து புகைப்படம் எடுத்தேன் என கூறியுள்ளார். இதன்மூலம் 'லியோ' படத்தில் அபிராமி வெங்கடாசலம் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X