2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

லுக்கை மாற்றிய ஜுலி

J.A. George   / 2021 ஜனவரி 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலராலும் அறியப்பட்ட  ஜுலி, கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பின்னர், சர்ச்சைகளுக்கு மத்தியில் சில தொலைக்காட்சிகளில் தலைக்காட்டத் தொடங்கினார். அடுத்து சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார்.

இதுவரை “அம்மன் தாயி“, “அனிதா பயோபிக்“ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் புதுவரவாக வரவிருக்கும் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ எனும் புது திரைப்படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கவர்ச்சியில் களமிறங்கியுள்ள ஜுலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X